ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
ஹீரோ, அறம், அயலான் போன்ற படங்களை கே.ஜே.ஆர் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ராஜேஷ். தற்போது முதல்முறையாக கதாநாயகனாக அங்கீகாரம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது பட அப்டேட் வெளியானது. அதன்படி, எனிமி, மார்க் ஆண்டனி போன்ற படங்களை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரீகன் ஸ்டெனிசலஸ் இயக்குகிறார்.
இதில் கதாநாயகனாக ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கில் வெளியான கோர்ட் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீதேவி அப்பலா நடிக்கிறார். அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ஹரிஷ் குமார், அஸ்வின் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் அறிவித்துள்ளனர்.