'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தமிழ் சினிமாவில் யதார்த்தமான, திறமையான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எந்த வாரிசு நடிகராகவும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியால் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'மகாராஜா' படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. தியேட்டர் வசூலில் 150 கோடியைக் கடந்தது. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு வெளிநாடுகளிலும் உள்ள சினிமா ரசிகர்கள் படத்தை ரசித்துப் பார்த்தார்கள்.
அதற்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த 'விடுதலை 2', இந்த வருடத்தில் மே மாதம் வெளியான 'ஏஸ்' ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. 'ஏஸ்' படத்திற்கு விமர்சனங்களும் கூட பாசிட்டிவ்வாக வரவில்லை. வசூல் ரீதியாக பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. அதன் தோல்வியிலிருந்து விஜய் சேதுபதியை நேற்று முன்தினம் வெளியான 'தலைவன் தலைவி' காப்பாற்றியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 20 கோடிக்கும் அதிகமான வசூலை அந்தப் படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிடும் என்றே சொல்கிறார்கள்.




