இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
திரையுலகை சேர்ந்தவர்களாலும் ரசிகர்களாலும் பொதுமக்களாலும் கேப்டன் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். திரையுலகில் பல சாதனைகளையும் புதுமைகளையும் செய்த விஜயகாந்த் தமிழ் படங்களில் மட்டும் நடித்தாரே தவிர, வேறு எந்த மொழி படங்களிலும் அவர் ஒருபோதும் நடித்ததில்லை. இதுவே அவருக்கு ஒரு தனிச்சிறப்பாகவும் அமைந்துவிட்டது. இந்த நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றில் விஜயகாந்த்திற்கும் திருவனந்தபுரத்திற்கும் மலையாள திரையுலகிற்கும் உள்ள தொடர்பு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கஜேந்திரா படப்பிடிப்புக்காக கேரளா சென்ற போது விஜயகாந்ததே இதை பகிர்ந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் சாராம்சம் இதுதான்.
விஜயகாந்த் தமிழில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக அவர் கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அவ்வப்போது தனது நண்பர்களுடன் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது பால்ய கால நண்பர் சுந்தர்ராஜனின் சகோதரி முத்துலட்சுமியின் வீடு திருவனந்தபுரத்தில் தான் இருந்தது. முத்துலட்சுமியின் கணவர் அந்த பகுதியில் ஒரு நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். மலையாள நடிகர்களான சத்யன் மற்றும் ஜெயன் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தீவிர ரசிகரான விஜயகாந்த் திருவனந்தபுரம் வரும்போது எல்லாம் அங்குள்ள ஸ்ரீகுமார் திரையரங்கில் தனக்கு பிடித்த படங்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாராம்.
அப்படி தமிழ் சினிமாவிற்குள் அவர் நுழைவதற்கு முன்பாக மலையாள திரை உலகிலும் வாய்ப்பு தேடினாராம். ஆனால் அவரது கருப்பு நிறம் காரணமாக சினிமாவில் நடிக்க அவருக்கு சரியான வாய்ப்புகள் அங்கே கிடைக்கவில்லை. அப்படி வாய்ப்பு தேடிய நாட்களில் நண்பர் சுந்தர்ராஜனின் சகோதரியின் கணவர் கண்ணன் இறந்த விடவே அவர் நடத்தி வந்த நகைக்கடையை ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி சில நாட்கள் நடத்தியும் இருக்கிறார் விஜயகாந்த். பின்னர் ஒரு கட்டத்தில் அது சரி வராமல் போகவே அந்த கடையை விற்று விட்டாராம் விஜயகாந்த்.
அதேபோல ஒவ்வொரு ஓணம் பண்டிகையின் போதும் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தாராம் விஜயகாந்த். இந்த தகவல்கள் எல்லாம் இதுவரை தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விஜயகாந்தின் மறைவை முன்னிட்டு இந்த தகவல்களை அந்த மலையாள முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.