சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மறைந்த நடிகர் விஜயகாந்த் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் படை தலைவன். இந்த படத்தில் விஜயகாந்த் மகனுக்கு உதவ, படத்தின் விளம்பரத்துக்காக முன்னணி நடிகர்கள், வேறு சிலர் நடித்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி யாரும் நடிக்கவில்லை. விஜயகாந்த் மகனுக்கு உதவுவேன் என்று சொன்ன லாரன்ஸ் கூட இல்லை.
இது குறித்து சண்முக பாண்டியனிடம் கேட்கப்பட அவரோ, ''லாரன்ஸ் உதவுவதாக சொன்னார். ஆனால், அதற்குள் பெரும்பாலான காட்சிகளை எடுத்துவிட்டோம். மற்றபடி சசிகுமார், கார்த்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்' என்றார்.
விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சிக்காக அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் வேண்டுகோளுக்காக செந்துார பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். ஆனால், இந்த பட சமயத்தில் சண்முக பாண்டியனை விஜய் கண்டு கொள்ளவில்லை. சண்முகபாண்டியன் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்தவில்லை. படத்தின் டிரைலர், பாடல்கள் என எதையும் தனது சோஷியல் மீடியாவில் கூட பகிரவில்லை.
நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்த, பல நடிகர்களுக்கு உதவிய விஜயகாந்த் மகன் படத்துக்கு முன்னணி நடிகர்கள், மூத்த சினிமாகாரர்கள் உதவில்லை, வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. பல்வேறு சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் தடைகளை தாண்டி இந்த படம் வந்துள்ளது. படம் ரிலீஸ் ஆக, சண்முக பாண்டியன் தாய் மாமா எல்.கே சுதீஷ்தான் அதிகம் உதவினார். அவரே உலகம் முழுக்க தனது பேனரில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த்தால் நேரடி, மறைமுக உதவி பெற்ற பல நடிகர், நடிகைகள் இந்த விஷயத்தில் கப்சிப்.