சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படை தலைவன் படம் இன்றைக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. முன்னதாக, சென்னையில் நேற்று மாலை தங்களுக்கு நெருக்கமான சினிமாக்காரர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த படத்தின் பிரிமியர் ஷோ நடத்தினர் விஜயகாந்த் குடும்பத்தினர். இதில் விஜயகாந்த மனைவி பிரேமலதா, மூத்த மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் ஏஐ., மூலம் உருவாக்கப்பட்ட விஜயகாந்த் கவுரவ வேடத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சிறப்பு காட்சியில் விஜயகாந்த் வரும் சீன்களில் கைதட்டல், விசில் பறந்து இருக்கிறது. விஜயகாந்த் நடித்த பொட்டு வைத்த தங்ககுடம் பாடலும் இந்த படத்தில் இடம் பெறுகிறது. படை தலைவன் படத்துக்கும் இசையமைத்தவர் இளையராஜா தான். ஒரு யானைக்கும், ஹீரோவுக்குமான பாசமே படைதலைவன் என்று கூறப்படுகிறது.