சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பாலுமகேந்திராவின் ஆஸ்தான நடிகையாக இருந்தவர் அர்ச்சனா. 2 தேசிய விருதுகளை பெற்றுள்ள அவர் சில கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார். கார்த்திக், மோகன் மாதிரியான இரண்டாம் வரிசை நாயகர்கள் சிலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்ததில்லை. என்றாலும் அவர் விஜயகாந்திற்கு ஜோடியாக நடித்த படம் 'ஏமாற்றாதே ஏமாறாதே'. வி.சி.குகநாதன் இயக்கிய இந்த படத்தில் அனுராதா, விஜயகுமார், சுமித்ரா, சுருளிராஜன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.
கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி அண்ணனோடு சென்னை வரும் தங்கையை வில்லன்கள் கூட்டம் பலாத்காரம் செய்து கொன்று விட நேர்மையான இன்ஸ்பெக்டரான விஜயகாந்த் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதுதான் கதை.
இதில் விஜயகாந்தின் காதலியாக அர்ச்சனா நடித்தார். படத்தில் அவரது அதிகப்படியான மேக்அப் கொண்ட தோற்றமும், நடிப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் பெரிய தோல்வி அடைந்தது.