மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகிய படம் 'துருவ நட்சத்திரம்'. சில பல காரணங்களால் நீண்ட காலமாக நடந்த படப்பிடிப்பு, படம் முடிந்த பின்னும் வெளியிட முடியாத சிக்கல் என கடந்த சில வருடங்களாக இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் முடங்கிக் கிடக்கிறது.
12 வருடங்களாக முடங்கிக் கிடந்த 'மதகஜ ராஜா' படம் இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்து எதிர்பாராத வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதனால், ஒரு படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியாக இருந்தால் எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை முடங்கிக் கிடக்கும் படங்களை எடுத்தவர்களுக்கு வந்தது.
கவுதம் மேனன் சமீபத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஒரு முதலீட்டாளருக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அவர் பிடித்தாகச் சொல்லியிருக்கிறார். அதனால், இப்படத்திற்கான நிதிச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் முயற்சியில் கவுதம் இறங்கியிருக்கிறார். படத்தை வெளியிடும் வரையில் வேறு படங்களில் நடிக்கவோ, இயக்கவோ செய்யாமல் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடுவதை மட்டும் முதல் கடமையாக வைத்திருக்கிறாராம்.
சீக்கிரமே நட்சத்திரத்திற்கு வெளிச்சம் கிடைத்தால் சரி.