மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

விஜய் நடித்த கில்லி, சச்சின் உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அவை குறிப்பிடத்தக்க வசூலையும் கொடுத்தது. அந்த வரிசையில் வருகிற 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். இதையொட்டி அவர் நடித்த 'மெர்சல்' படம் ரீ ரிலீசாகிறது. இதனை படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டூடியோ சார்பில் முரளி ராமசாமி வெளியிடுகிறார்.
2017ம் ஆண்டு வெளியான இந்த படத்தை அட்லி இயக்கினார். விஜய்யுடன் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, சத்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.