மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பெண் டாக்டர்கள் சினிமாவிற்கு வருவது அதிகரித்துள்ளது. சாய்பல்லவி, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்தும் ஒரு டாக்டர், நடிகை ஆகியிருக்கிறார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தீபா பாலு. டாக்டருக்கு படித்துள்ள இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம். இதனால் டாக்டர் சேவையை செய்து கொண்டே யு டியூப்களில் வெளியான சில குறும்படங்களில் நடித்தார். அதில் அவர் நடித்த 'தேன் மிட்டாய்' என்ற தொடர் பரவலான பாராட்டை பெற்றது.
தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'ஹார்ட் பீட்' தொடரில் டாக்டராகவே நடிக்கிறார். அவரது கதாபாத்திரமான 'ரீனா' பாப்புலராகி உள்ளது. அடுத்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் வழியில் நானும் தரமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது, கதைகள் கேட்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளிவரும்" என்கிறார் தீபா.