'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் நடித்த 'மெர்சல், பிகில்', தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'கிராக்' படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மகா என்ற பெண்ணுக்கும் இன்று(ஏப்., 25) ஊரடங்கிற்கு மத்தியில் திருமணம் நடந்தது.
நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கதிர், 'கிராக்' பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணப் புகைப்படங்கள் அவர்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடின்படி தான் திருமணம் நடைபெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோருக்குப் பின்னால் உள்ள காலியான இருக்கைகளே அதற்கு சாட்சி. இன்று ஊரடங்கிற்கு மத்தியிலும் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல திருமணங்கள் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நடைபெற்றுள்ளது.
திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.