காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 7-ந்தேதியில் இருந்து ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தனர். அந்த வகையில் சண்டை மற்றும் பாடல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முழுக்க ஜார்ஜியாவில் படப்படிப்பு நடத்த திட்டமிட்டிருந்தார் நெல்சன்.
ஆனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், விஜய் 65ஆவது படப்பிடிப்பிலும் சிலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டதோடு, இந்தியாவிலும் லாக் டவுன் போடப்பட்டிருப்பதால், அடுத்தபடியாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டால் ஜார்ஜியாவிலேயே முகாமிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்பதால், படப்பிடிப்பை உடனடியாக பேக்அப் செய்து விட்டு விஜய்-65 படக்குழு இன்று சென்னை திரும்பியுள்ளது.
இந்நிலையில் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.