கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள அவரது 65வது படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளது. அதற்காக விஜய், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று முன்தினம் ஜார்ஜியா புறப்பட்டுச் சென்றனர்.
நேற்று படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா பறந்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் விமான நிலையப் புகைப்படங்களைப் பதிவிட்டு “நான் மீண்டும் செல்கிறேன்,” என வெளிநாடு செல்வதைக் குறித்து பதிவிட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் பூஜா ஹெக்டே. அவரது தெலுங்கு, ஹிந்தி பிரபலம் படத்தை பான்-இந்தியா வெளியீடாகவும் வெளியிட உதவி புரியும்.
'மாஸ்டர்' படத்தில் லோகேஷ் கனகராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள விஜய், அடுத்த படத்திலும் வளரும் இயக்குனரான நெல்சனுடன் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவி வரும் நிலையில் படக்குழு ஜார்ஜியா நாட்டில் விரைவாக படப்பிடிப்பை முடித்து இந்தியா திரும்ப உள்ளனர்.