அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே | 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார் | மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் |

மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்று வந்த பூஜா ஹெக்டே. விதவிதமான பிகினி உடையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனால் லட்சக் கணக்கானவர்கள் இவரை பின்தொடர்கிறார்கள்.
சமீபகாலமான மது நிறுவனங்கள் நடிகர், நடிகைகளை கொண்டு அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரம் செய்து வருகிறது. இதற்காக அவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்கிறது. ஏற்கனவே காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகள் இதுபோன்று விளம்பரப்படுத்தினர். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது பூஜா ஹெக்டே ஒரு பிரபல நிறுவனத்தின் மதுவை பக்காவாக ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஐஸ், சோடா கலந்து வைத்து விட்டு கவர்ச்சி உடையில் குதூகல ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட. ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். பணத்துக்காக மது குடிப்பதை ஊக்கப்படுத்தலாமா என்று பலர் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.