லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தவர், மீண்டும் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது பீஸ்ட் படத்தில் விஜய் உடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பேட்டிகளில் கூறி வருகிறார் பூஜா ஹெக்டே.
அவர் கூறுகையில், நான் இதுவரை நடித்த ஹீரோக்களில் விஜய் தான் மிகவும் எளிமையான நடிகராக இருக்கிறார். அனைவரிடத்திலும் அன்பாகவும் பழகுகிறார். அதோடு ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாலையிலேயே வந்து மேக்கப் போட்டுக் கொண்டு இயக்குனர் ஆக்சன் சொல்வதற்கு முன்பே கேமரா முன்பு வந்துவிடுகிறார். படப்பிடிப்பு தளத்துக்குள் வந்துவிட்டால் அந்த படத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்.
அதோடு தன்னுடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். பாடல் காட்சிகள் மட்டுமின்றி வசன காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தும் விஜய் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அதிகப்படியான கவனம் செலுத்துகிறார்.
இதுவரை எத்தனையோ முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய்யை போன்று ஒரு கடினமான உழைப்பாளியை இதுவரை நான் பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே, என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது விஜய்தான் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.