செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்திருக்கும் பூஜா, சீக்கிரமே தமிழிலும் முன்னணி நடிகையாக மாறிவிடுவார் எனத் தெரிகிறது.
அவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். 'பீஸ்ட்' படம் வரும் போது அது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பூஜா பதிவுகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். இன்ஸ்டாவில் அவர் எப்போது புகைப்படங்களைப் பதிவிடுவார் என ஒரு கூட்டமே காத்திருக்கிறது. நேற்று இரவு அசத்தலான சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
கையில் ரோஜாப் பூ ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர் வெட்கப்படும் சில புகைப்படங்களையும் பதிவிட்டு, “ரோஜா வேண்டுமா, சாக்லேட் வேண்டுமா, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்,” என்று கேட்டுள்ளார். ஆனால், புகைப்படத்தில் சாக்லேட்டே இல்லையே எனத் தேடிப் பார்த்தால்.......தன்னைத்தான் அவர் 'சாக்லேட்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாக்லேட் பிடிக்காத ரசிகர்களும் இருப்பார்களா என்ன ?.