செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சர்வதேச டிவி ஷோவான 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சி தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் டிவியில் ஒளிபரப்பை ஆரம்பித்தது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.
இரண்டு மொழிகளிலுமே இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்படவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி போல பரபரப்பாகப் பேசப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தமன்னா போன்ற ஒரு முன்னணி நடிகை தொகுத்து வழங்கியும் தெலுங்கில் ரேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறதாம். அதனால் தமன்னாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அனுசுயா என்ற டிவி தொகுப்பாளினி, நடிகையை புதிய தொகுப்பாளராகப் போட உள்ளார்களாம்.
பெரிய நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கினாலும் ஒரு டிவி நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை என்றால் அதை நேயர்கள் ரசிக்க மாட்டார்கள். இதற்கு முன்பு சில பிரபல நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கிய சில நிகழ்ச்சிகள் சில வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் நிறுத்தப்பட்ட வரலாறு உண்டு. அந்த வரிசையில் 'மாஸ்டர் செப்' சேருமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.