நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று வனிதா தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒருவர், வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணத்தின் போது எடுத்த லிப் லாக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் எப்போதும் நேசிக்கப்படுபவள் என்பதை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. காதல் என்பது ஒரு அழகான விஷயம். மற்றவர்கள் உங்கள் அன்புக்கு தகுதியானவர்கள் இல்லை அல்லது சூழ்நிலை சரியாக இல்லை என்றால் விலகி செல்ல வேண்டும். உங்களுக்கு உங்களைப் போன்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இது புரியாது என பதிலளித்துள்ளார்