'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
காதல் அழிவதில்லை' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து 'லாடம்' 'பத்து எண்றதுக்குள்ள' போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை வைத்து லைகர் என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் வில்லனாக மைக் டைசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சார்மி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாயுடன் செல்லமாக கொஞ்சி விளையாடுகிறார் சார்மி. அந்த நாய் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து நாயா... அல்லது சிங்கமா என்று கமண்ட் செய்து வருகிறார்கள்.