கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதேபோல் தெலுங்கிலும் ஒடேலா-2 படத்திற்கு பிறகு புதிய படங்கள் இல்லாத நிலையில் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நான் நடித்தபோது எந்த படமும் என்னை பேச வைக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த பத்ரிநாத் என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்களும் சிறப்பு பாடல்களில் நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடனமாடிய பாடல்கள் தான் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளன. அதனால் தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனம் ஆடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.