22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நெல்சன் இயக்கத்தின் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக உள்ளன. விரைவில் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கு, ஆன்மிக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை தனது கையெழுத்தை போட்டு பரிசாக அளித்திருக்கிறாராம் ரஜினி. இதை பெற்றுக் கொண்ட தமன்னா, ரஜினி கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ‛‛ரஜினி உடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன்'' என்கிறார்.