Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' - தாறுமாறாக நடித்துள்ள தமன்னா

08 ஜூன், 2023 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Tamannah-acted-very-glamour-in-Lust-stories-2

'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற ஆந்தாலஜி படம் 2018ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. 2013ல் வெளிவந்த 'பாம்பே டாக்கீஸ்' என்ற ஆந்தாலஜி படத்தின் பின்தொடர் படமாக அது உருவானது. அதன் இரண்டாம் பாகமான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அமித் ரவீந்தரநாத் சர்மா, கொன்கொனா சென் சர்மா, பால்கி, சுஜாய் கோஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, கஜோல், குமுத் மிஷ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா, தமன்னா, திலோத்தமா ஷோமே, விஜய் வர்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இத்தனை பேர் நடித்திருந்தாலும் இரண்டு நாள் முன் வெளியான டீசரில் அதிக பரபரப்பை எற்படுத்தியவர் தமன்னா மட்டுமே. இதுவரை அவர் காட்டாத கவர்ச்சியை இத்தொடரில் காட்டியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்காக அவர் இதுவரை வாங்காத அதிகபட்ச சம்பளத்தையும் வாங்கியுள்ளதாக பாலிவுட் கிசுகிசுக்கிறது. மேலும், தமன்னாவின் காதலன் என சொல்லப்படும் விஜய் வர்மா உடன் படுக்கையறைக் காட்சிகளிலும் தமன்னா நெருக்கமாக நடித்துள்ளாராம்.

இப்படத்தின் போஸ்டர்களில் ஒன்றான 'த செவன் வொன்டர்ஸ்' என்ற போஸ்டரைப் பகிர்ந்து விஜய் வர்மா, “லஸ்ட் ஸ்டோரிஸ் 2, லவ்லி லேடிஸ்” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா, “எட்டாவது அதிசயத்துடன் கையெழுத்திட என்ன செய்ய வேண்டும், ஒரு நண்பருக்காகக் கேட்கிறேன்,” என கமெண்ட் போட்டுள்ளார் தமன்னா.

இப்படத்தின் டீசரில் சீனியர் நடிகையான நீனா குப்தா, “ஒரு காரை வாங்கும் போது டெஸ்ட் டிரைவ் போவதில்லையா, திருமணத்திற்கு முன்பாக ஏன் டெஸ்ட் டிரைவ் போவதில்லை,” எனக் கேட்கும் வசனம் இது எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்கும். வெளியாகும் போது இன்னும் என்னென்ன சர்ச்சைகள் வரப்போகிறதோ ?.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கேரளா தியேட்டர்கள் ஸ்டிரைக் : தமிழகத்தில் எதிரொலிக்குமா ?கேரளா தியேட்டர்கள் ஸ்டிரைக் : ... நினைவுப்பாதையில் ஒரு பயணம் : ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினி நினைவுப்பாதையில் ஒரு பயணம் : ஏவிஎம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
12 ஜூன், 2023 - 11:06 Report Abuse
திரு.திருராம் கோடிகளில் சம்பாதித்து சேர்த்துவைத்துவிட்டு நடுத்தரவயது தாண்டியபின் ஒரு நாய்குட்டி அல்லது பூனைக்குட்டியுடன் ஒரு வீட்டில் செட்டில் ஆனபிறகு படவாய்ப்பு சீரியல் வாய்ப்பு இல்லாத நிலையில், பேட்டி கொடுப்பார்கள்...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08 ஜூன், 2023 - 19:49 Report Abuse
Barakat Ali காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று நினைக்கிறவங்க ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in