சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸின் தோற்றம் வெளியாகியுள்ளது.
புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்” மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் துவங்கப்பட்டது. பான்-இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தபோது, யானை சம்பந்தமான சண்டைக்காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார்.
'ஆங்-பாக்' படத்தொடரின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். 'ஆங்-பாக்' படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.
'காந்தாரா, மகாராஜா' படங்களுக்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோரும் நடிக்கின்றனர்.
திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் படம் விரைவில் வெளியாகிறது.