செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களைத்தான் அதிகம் பதிவிடுவார்கள். எப்போதாவது ஒரு முறைதான் கலாச்சார உடை பக்கம் கொஞ்சம் செல்வார்கள். இந்தக் கால இளைஞர்களுக்குக் கூட பெண்களை புடவையில் பார்ப்பது நிறையவே பிடிக்கும். அந்த அளவிற்கு புடவை என்பது பெண்களுக்கு தனி அழகு என்பது பலரது கருத்து.
'பீஸ்ட்' பட கதாநாயகியான பூஜா ஹெக்டே நேற்று அவருடைய இன்ஸ்டாவில் புடவை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அவரது அண்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது அவரும் புடவை அணிந்து, நகை அலங்காரத்துடன் எடுத்த சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றிற்கான லைக்குகள் ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. வழக்கம் போல எண்ணற்ற கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.
பூஜா தற்போது சல்மான் கான் ஜோடியாக 'வீரம்' ஹிந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.