பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது. இன்றும் அது தொடர உள்ளது.
நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று படத்தின் கதாநாயகி த்ரிஷா உள்ளிட்டோரது அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இத்தனை நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளதால் யாருக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படியும் மூன்று மணி நேரப் படத்தைத்தான் எடுக்கப் போகிறார் லோகேஷ். அப்படியே எடுத்தாலும் ஆளுக்கு ஐந்து நிமிடாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால்தானே சரியாக இருக்கும்.
நேற்று அறிவிப்பு வெளியான நடிகர்கள், நடிகைக்கு எப்படியும் நல்ல சம்பளம்தான் பேசியிருப்பார்கள். அதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும். அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும் விமர்சனம் எழும். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 300 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். லோகேஷ் எப்படியும் சமாளிப்பார் என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.