பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
நடிகை பூஜா ஹெக்டே இப்போது சல்மான் கானுக்கு ஜோடியாக கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் தனது சினிமா அனுபவத்தை பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் பூஜா ஹெக்டே.
அவர் கூறியது, திரையுலகில் என் வெற்றி ஒரே இரவில் சுலபமாக நடந்து விடவில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க எனக்கு மொழி தெரியாது என்பதால் கஷ்டமாக இருந்த நிலையில் வசனங்களை உதவி இயக்குனர்களை பேச வைத்து பயிற்சி எடுத்து கொண்டேன். நான் நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலை இருந்தது. ஒரு வருடம் எந்த படவாய்ப்பும் வராமல் இருந்தது. திடீரென்று பட வாய்ப்புகள் குவிந்து மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன். இப்போது நான் நல்ல நிலையில் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை திரும்பி பார்க்கிறேன். எனக்கு நிறைய கனவு கதாபாத்திரங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்குள் உள்ள தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.