குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கி தயாரித்த பார்த்திபன் தான் மட்டுமே படம் முழுக்க நடித்து இருந்தார். அதையடுத்து அந்த படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கிறார். மேலும் தற்போது எழில் இயக்கத்தில் யுத்த சத்தம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருக்கிறார் பார்த்திபன்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பார்த்திபன் பேசுகையில், ‛‛யுத்த சத்தம் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் தான் செய்த சில மாற்றங்களை இயக்குனர் எழில் நேர்மையான முறையில் கையாண்டுள்ளார். இன்றைக்கு பெரும்பாலான இயக்குனர்கள் ஒரு இயக்குனர் தான் எழுதிய காட்சிகளை படமாக்கும்போது எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது போலவும், புதிதாக அவர்கள் சொல்லிக் கொடுப்பது போலவும் நடந்து கொள்வார். ஆனால் இயக்குனர் எழில் நான் செய்த சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதோடு மேடையில் என்னை பாராட்டியுள்ளார். இது அவரது நேர்மையை வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும் தனது இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு தகவல் வெளியிட்டார். அதாவது இந்த படத்தை 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறோம். இதற்காக பத்து வருடங்கள் போராடி 90 நாட்கள் பயிற்சி எடுத்து படமாக்கி உள்ளேன். அதோடு 64 ஏக்கரில் 58 செட்டுகள் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரே ஷாட்டில் எடுத்ததை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். வெட்டி ஒட்டியது என தெரிவித்துள்ளார்கள். அந்த அளவுக்கு ஒரே ஷாட்டில் தத்ரூபமாக படமாக்கி இருக்கிறோம். இதுவே எனக்கு கிடைத்த பெருமை என்கிறார் பார்த்திபன்.