இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக சட்டசபை தேர்தல் அன்று ஓட்டளித்து விட்டு அன்று இரவே ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய்.
இந்நிலையில், ஜார்ஜியாவில் ஒரு அதிரடியான ஆக்சன் காட்சியும், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளும் கடந்த இரண்டு வாரங்களாக படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் விஜய்யுடன் சில வெளிநாட்டு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஜார்ஜியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் இந்த வாரத்தோடு முடிவடைந்து விடுவதால் இந்த வார இறுதியில் விஜய்-65 படக்குழு சென்னை திரும்புகிறது.
முகமூடிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து பூஜா ஹெக்டே தமிழில் ரீ-என்டரி கொடுக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.