இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படம் 'சர்தார்'. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று(ஏப்., 25) பிற்பகல் 12.30க்கு வெளியிட திட்டமிட்டு, டுவிட்டர் தளத்தில் சில 'கோடுகளை' பதிவிட்டு, “மக்களே இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, இல்லையென்றால் இன்று 12.30 மணிக்கு கார்த்தி இதற்கு பதில் சொல்வார்,” என இயக்குனர் மித்ரன் டுவீட் செய்திருந்தார்.
டுவிட்டரில் இப்படி பதிவிட்டுவிட்டு ஊர் முழுவதும் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' என இப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊருக்கே தெரியும்படி போஸ்டரையும் ஒட்டிவிட்டு, 12.30 மணிக்கு கார்த்தியின் டுவிட்டரையும் பாருங்கள் என இயக்குனர் கேட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளார்கள்.
போட்ட பிளானை ஒழுங்கா போட வேணாமா, ஒரு படத்தில் வடிவேலு திருடப் போவதும், அதற்கு முன்பே அவரது ஆட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சர்தார்' படத்திலாவது சஸ்பென்ஸை கரெக்டா வையுங்கப்பா...