'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கொரோனாவின் தற்போதைய அலை கடந்த வருடத்தை விட மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. நாளை(ஏப்., 26) முதல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக ஏப்ரல் 30 வரை தியேட்டர்கள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் பின்னர் நவம்பர் 10ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்பிறகு மிக மிகக் குறைந்த அளவில் கொரோனா தொற்று இருந்தாலும் தியேட்டர்களுக்கு வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. பிப்ரவரி 1ம் தேதி முதல் தான் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பமான பிறகு, ஏப்ரல் 10ம் தேதி முதல் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் தியேட்டர்கள் மீண்டும் மூடப்படுகின்றன.
அரசு தெரிவித்துள்ள ஏப்ரல் 30 வரையிலான கால கட்டத்திற்குப் பிறகும் தியேட்டர்களைத் தொடர்ந்து மூட வேண்டிய சூழல் ஏற்படலாம் என தியேட்டர்காரர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அடுத்த மாதத்திலும் கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதே அதற்குக் காரணம்.
மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்தால் மே மாதத்திற்குப் பிறகு இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது என்று கருதுகிறார்கள். ஆனாலும், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தியேட்டர்களுக்கு வர வாய்ப்பில்லை. அதனால், கடந்த ஆண்டு போலவே இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் வரை தியேட்டர்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றே திரையுலகத்தினர் அஞ்சுகிறார்கள்.