ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

அஷிஷோர் சாலமன் இயக்கத்தில், நாகார்ஜுனா, தியா மிர்சா மற்றும் பலரது நடிப்பில் உருவான தெலுங்குப் படம் 'வைல்ட் டாக்'. இப்படம் இந்த மாதம் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான வரவேற்பு படத்திற்குக் கிடைக்கவில்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராத காரணத்தால் இப்படம் தியேட்டர் வசூலிலும் சறுக்கியது.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டார்கள். தெலுங்கில் தயாரான இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாம். தெலுங்குப் பதிப்பு முதலிடத்திலும், தமிழ்ப் பதிப்பு ஐந்தாமிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளதாம். எதிர்பார்த்ததை விட குறைந்த காலத்தில் அதிகமான பார்வையாளர்களை இந்தப் படம் பெற்றுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
தென்னிந்திய அளவில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதாம் வைல் டாக். ஓடிடி தளங்களில் ஒரு படம் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரையிலும் ஓடிடி தளங்கள் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையை அறிவித்ததில்லை. இருந்தாலும் இத்தகவல்கள் குறித்து படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளதாம்.
தியேட்டர்களில் கிடைக்காத வரவேற்பு ஓடிடி தளத்தில் கிடைக்கும் என்பதே அதற்குக் காரணம்.