Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: காட்சிகளை விற்ற மாடர்ன் தியேட்டர்ஸ்

24 ஜூன், 2025 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Flashback-Modern-Theatres-sold-out-screenings
Advertisement


சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் டி.ஆர்.சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர். வெளிநாட்டு படங்களை பார்த்து அதுபோன்ற படங்களை தயாரிக்கவும், இயக்கவும், நடிக்கவும் செய்தார். அவரின் படங்களில் அன்றைய ஹாலிவுட் படங்களின் தாக்கம் இருக்கும். நேரடியாக சில ஹாலிவுட் படங்களை தழுவி படங்கள் எடுத்திருந்தார். அப்போதெல்லாம் காப்பி ரைட் பிரச்னைகள் பெரிதாக இருந்ததில்லை. அதனால் இது சாத்தியப்பட்டது.

அதே நேரத்தில் பல ஹாலிவுட் படங்களின் உரிமத்தையும் அவர் வாங்கி வைத்திருந்தார். இது தவிர ஹாலிவுட் படங்களில் இடம்பெற்ற குண்டு வெடிக்கும் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள், சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகளின் நடமாட்டம், விமானம் பறக்கும் காட்சிகளை உரிமத்துடன் சேகரித்து வைத்திருந்தார். குறிப்பாக போர் காட்சிகள். இயற்கை சீற்ற காட்சிகள்.

தமிழ் படங்களில் இந்த காட்சிகள் தேவைப்பட்டால் அதை படமாக்குவதற்கு பெரிய செலவு பிடிக்கும், இதனால் இயக்குனர்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் தேவையான காட்சிகளை வாங்கி தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு அவர்கள் பணம் கொடுத்தார்களா? இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை. ஆனால் மாடர்ன் தியேட்டர்சில் நூற்றுக்கணக்கான ஹாலிவுட் படங்களின் காட்சிகள் பிலிமில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அது பல படங்களில் பயன்படுத்தப்பட்டது.

உதாரணத்திற்கு ஒன்று...

ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் வீணை எஸ்.பாலசந்தர் நடித்த படம் 'தேவகி'. அவருடன் என்.என்.கண்ணப்பா, நம்பியார், பி.பாலசுப்பிரமணியம், வி.என்.ஜானகி, மாதுரி தேவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். 'தேவகி' என்ற டைட்டில் ரோலில் வி.என்.ஜானகி நடித்தார். மாதுரி தேவி இரண்டாவது நாயகியாக நடித்தார். லலிதா, பத்மனி, ராகினி, பேபி கமலா ஆகியோரின் நடனங்களும் படத்தின் இடம்பெற்றிருந்தன. பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் கவுரவ வேடத்தில் பாடி நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிந்து விழும் காட்சிகள், ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ப்ராங்க் காப்ரா இயக்கிய 'லாஸ்ட் ஹாரிசன்' படத்தில் இடம் பெற்றதாகும். அதனை டி.ஆர்.சுந்தரத்திடமிருந்து வாங்கி இயக்குனர் ஆர்.எஸ்.மணி பயன்படுத்தியிருந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : சம்பளம் 50 கோடி?தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : ... இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா இளையராஜா பாணியை பின்பற்றும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in