'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! |
‛96, மெய்யழகன்' உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர் கோவிந்த் வசந்தா. மலையாளத்திலும் முன்னணி இசயைமைப்பாளராக உள்ளார். இவர் கதை பிடித்து இருந்தால், தனக்கு அந்த டீம் செட்டானால் மட்டுமே இசையமைப்பார். தனி இசைக் குழுவையும் நடத்தி வருகிறார். இந்த வாரம் வெளியாக உள்ள ‛குட் டே' படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஹீரோ பிரித்விராஜ் ராமலிங்கம் 96, மெய்யழகன் பட இணை இயக்குனர் என்பதால் இந்த படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் ஒவ்வொருவரும் ஒருவித சிறப்பு பாணியை கடைப்பிடிப்பார்கள். இளையராஜாவின் பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டும். முக்கியமான அல்லது உணர்ச்சிபூர்வமாக சீன்களில் சில நிமிடம் அல்லது பல நொடிகள் இசையமைக்க மாட்டார் இளையராஜா. அந்த இடத்தை அமைதியாக விட்டு விடுவார். அந்த அமைதி அந்த சீனின் தாக்கத்தை அதிகரிக்கும்.
அந்தவகையில் குட் டே படத்தில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான சீனில் பின்னணி இசையை பயன்படுத்தாமல் அமைதியாக விட்டு இருக்கிறார் கோவிந்தவசந்தா. அந்த சீனும் உருக்கமாக வந்துள்ளதாம். இந்த படத்தில் இடம் பெற்ற, மகளை பிரிந்த அப்பாக்களுக்கு சமர்பணமாக பிரதீப் குமார் பாடிய மின்மினியே ராசத்தி பாடலும் , அப்பாக்களை பிரிந்த மகள்களுக்கு சமர்பணமாக சிறுமி ரைகைனா ரபீக் பாடிய அம்புலியே ஆரோரோ பாடலும் ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது.