ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை |

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் 2012ல் தேசிய விருதுகளை பெற்ற தட்டத்தின் மறயத்து என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என கொஞ்ச நாட்கள் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும் ரசிகர்களை ஆச்சரியப்படும் விதமாக தற்போது கேரள கலையான களறி பயிற்று கலையை கற்று வருகிறார் இஷா தல்வார்.
கேரளாவில் உள்ள பிரபல களரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ஒரு புதிய கலையை கற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவா அல்லது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காகவா என்பது பற்றிய விவரம் எதுவும் அவரிடமிருந்து வெளியாகவில்லை.