அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்பட நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள காஜல், ‛களரிப்பட்டு என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும். இது 'போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. இந்த கலையில் இருந்து தான் ஷாலின், குங்பூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது.
இந்த களரி பொதுவாக கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான நடைமுறையாகும். 3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசிரியருக்கு நன்றி. அவர் என்னை பொறுமையாக வழி நடத்தியதற்கும், இந்த கலையை சிறப்பாக கற்று கொடுத்ததற்கும் நன்றி' என அவர் தெரிவித்துள்ளார்.