அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகர் அஜித்குமார், 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' பட வேலைகளை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்பதில் பிஸியாகியுள்ளார். துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றுள்ள அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று (ஜன.,7) கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது, வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பிய அஜித்தை வேறு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இன்னும் சில நாட்களில் கார் ரேஸ் துவங்க உள்ள நிலையில், அஜித்தின் கார் விபத்துக்குள்ளானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.