சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். அந்த வகையில் ஏற்கனவே ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் ரேஸ் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அப்போது கார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அஜித்குமார் விபத்தில் சிக்கி காயம் இன்றி தப்பி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சியின்போதும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. என்றாலும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்று நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் தனது குழுவுடன் கலந்து கொள்கிறார். மொத்தம் 12 மணி நேரம் நடைபெற உள்ள இந்த போட்டியில் அஜித்துடன் சேர்த்து 3 ஓட்டுனர்கள் மாறி மாறி காரை இயக்கப் போகிறார்கள்.