Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன்

17 மார், 2026 - 01:33 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-to-continue-as-Virumaandi-in-Seyon
Advertisement

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் 'தாய் கிழவி' இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் 'சேயோன்'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் முன்னோட்ட வீடியோவுடன் வெளியானது.

'சேயோன்' என்பது குறிஞ்சி நிலக் கடவுளான முருகரைக் குறிக்கும். 'சிவந்த தலைவன்' என்பதுதான் 'சேயோன்'. அழகு, ஞானம், வீரம் வாய்ந்த சிவந்த நிறமுடையவன் என்பதும் அர்த்தம்.

இந்தப் படத்தில் முருகர், மற்றும் நாட்டுப் புற தெய்வமான விருமாண்டி ஆகியோரை மையப்படுத்திய ஒரு கதையாகவும் இப்படம் இருக்கும் என்கிறார்கள். 'சேயோன்' ஆக சிவகார்த்திகேயன் நடிக்க 'விருமாண்டி' கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2004ம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவந்த படம் 'விருமாண்டி'. அந்தப் படம் தற்போது வரை பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது. கமல்ஹாசன் 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி' கதாபாத்திரத்தில் நடித்தால் அது பொருத்தமாகவும் படத்திற்குக் கூடுதல் பலமாகவும் இருக்கும் என இயக்குனர் சிவகுமார் முருசேன் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன்'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : ... பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap