அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழில் பட்டதாரி படம் மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த அதிதி மேனன். நெடுநல்வாடை திரைப்படத்தின் இயக்குனர் மீது சர்ச்சை குற்றச்சாட்டு சுமத்தியது, தனது காதல் கணவர் நடிகர் அபி சரவணன் மீது புகார் கூறியது என தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய அவர் மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து ஆச்சர்யப்பட வைத்தார். மேலும் அதிதி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றி வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறாராம் மிர்னா. இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதுடன் பைக் சேசிங் காட்சிகளிலும் நடிக்கிறாராம். அதேபோல மலையாளத்தில் நடிக்க இருக்கும் படத்திற்காக சுமார் இருபது நாட்கள் களரி பயிற்சியும் மேற்கொண்ட மிர்னா, கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக பயிற்சியை நிறுத்தியுள்ளாராம்.