மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
கடந்த 1995ம் ஆண்டில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'பாட்ஷா'. சமீபத்தில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக போஸ்டர் வெளியிட்டனர். இந்த நிலையில் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றது மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனம் 60 ஆண்டுகள் எட்டியது ஆகியவற்றை கொண்டாடும் விதமாக விரைவில் 'பாட்ஷா' படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக 4K டிஜிட்டல் பொலிவுடன், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்திற்கான பணிகளை துவங்கி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.