சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 'படை தலைவன்' படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருந்தார். அவர் தந்தையை போல இருப்பதாகவும் அவரை போல நடிப்பதாகவும் அவரது ரசிகர்கள் சண்முக பாண்டியனை கொண்டாடி வருகிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் அவர் தனது தந்தையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
விஜயகாந்தின் உபசரிப்பு உலகம் அறிந்த ஒன்று. அவர் தனது அலுவலகத்தில் தினந்தோறும் மக்களுக்கு மதிய உணவு வழங்கி வந்தார். யார் அவரை சந்திக்க சென்றாலும் முதலில் சாப்பிட வைத்து தான் சந்திப்பார். இந்த வழியை சண்முக பாண்டியன் கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது நடித்து வரும் 'கொம்புசீவி' படத்தின் கடைசி நாள் அன்று படத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து, புத்தாடை வழங்கி மகிழ்வித்து இருக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார். பொன்ராம் இயக்குகிறார். சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிறகான பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து சண்முக பாண்டியன் கூறும்போது, "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி 'கொம்புசீவி' படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.