விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அஞ்சான். இந்த படம் திரைக்கு வந்தபோது கலவையான விமர்சனங்களை சந்தித்து. இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரைட்ஸை வாங்கிய நிறுவனம் அப்படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் வெளியிட்டபோது முன்பை விட படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி தற்போது இப்படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக சூர்யாவின் அஞ்சான் படம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரப்போகிறது. அதோடு ஏற்கனவே சூப்பர் ஹிட்டான படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை செய்து வரும் இந்த நேரத்தில் முதல் முறை திரைக்கு வந்தபோதே கலவையான விமர்சனங்களை சந்தித்த சூர்யாவின் இந்த அஞ்சான் படம் ரீ எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்யப்படும்போதாவது ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.