சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
சுராஜ் இயக்கத்தில், இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. 2006ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வடிவேலுவின் நகைச்சுவையும் அமைந்தது. அப்படத்தில் கதாநாயகனாக சுந்தர் சியின் கதாபாத்திரமான 'ரைட்டு', கதாபாத்திரத்தை விட வடிவேலுவின் 'நாய் சேகர்' கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
17 வருடங்களுக்குப் பிறகு 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகமான 'தலைநகரம் 2' வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று டிரைலர் வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகத்தை விஇசட் துரை இயக்கியுள்ளார். சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பல வன்முறைக் காட்சிகளுடன், கத்திக் குத்துக் காட்சிகளுடன், ரவுடிகளுக்கு இடையிலான மோதல் படமாக இப்படம் உருவாகியிருக்கும் என டிரைலரைப் பார்க்கும் போது தெரிகிறது. சில பெண்களின் ஆபாசமான காட்சிகளும் படத்தில் இருப்பதைப் பார்க்கும் போது 90களில் வர வேண்டிய படம் போலத் தெரிகிறது. மாறுபட்ட கதைகளுடன் கூடிய படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படியான படங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
'தலைநகரம்' முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவையும் இருந்ததால் அப்படத்திற்கு அனைத்து தரப்பிலும் வரவேற்பு இருந்தது. இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை இல்லை என்றாலும் வேறு எந்த நகைச்சுவையும் இல்லாமல் டிரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரத்தம் மட்டுமே தெறிக்கிறது.