மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு |

பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படம் இந்த வாரம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் முன்பதிவு இன்னும் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆரம்பமாகவில்லை. வட இந்திய மாநிலங்களிலும், மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் முன்பதிவு நடந்து வருகிறது. படத்தை 2 டி, 3 டி, ஐமாக்ஸ் தொழில்நுட்பங்களில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஐமாக்ஸ் திரையீட்டிற்கான முன்பதிவு எங்குமே ஆரம்பமாகவில்லை.
ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றும் வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறதாம். அதனால், படம் வெளியாகும் ஜுன் 16ம் தேதியன்று ஐமாக்ஸ் தியேட்டர்களில் படம் வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஐமாக்ஸ் தியேட்டர்களில் பார்ப்பது தனி அனுபவமாக இருக்கும். இவ்வளவு பிரம்மாண்ட படத்தின் ஐமாக்ஸ் வேலைகளை இன்னும் முடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.