ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
“பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே” படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் 'மின்மினி'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
அது பற்றி படத்தின் இயக்குனர் ஹலிதா, “மின்மினி' படத்திற்காக கதிஜா ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. மிகப் பெரும் திறமைசாலி அவர். அவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது,” என கதிஜா உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
'மின்மினி' படத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கி வருகிறார் ஹலிதா. 2015ல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அப்போது குழந்தை நட்சத்திரங்களாக படத்தில் நடித்தவர்கள் வளரும் வரையில் ஏழு ஆண்டுகள் காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். பொதுவாக இரண்டு கால கட்டங்களில் கதை நடக்கிறது என்றால் வெவ்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைப்பார்கள். ஆனால், ஹலிதா அப்படி செய்யாமல் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களையே மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து நடிக்க வைத்து படமாக்கியுள்ளார். திரைப்பட உருவாக்கத்தில் இது ஒரு புது முயற்சி.