ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்விக்கு ஏற்கனவே திருமணமாகி சிவா என்ற மகன் இருந்தார். முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கணவனை பிரிந்து பார்த்தசாரதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், மூத்த மகன் சிவா, தாமரையை விட்டு பிரிந்தே வாழ்ந்துள்ளார். பிக்பாஸ் வீட்டிலும் தனது சோகக்கதையை பகிர்ந்த தாமரை, சீக்கிரமே மூத்த மகன் சிவாவுடன் சேர வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மூத்தமகன் சிவா உடன் தாமரை மீண்டும் இணைந்துவிட்டார். தற்போது தாமரை செல்வி தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து குடும்பமாக சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து தாமரை செல்வி குழந்தைகளுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.