முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் |

'கயல்' தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் அமுதா. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சக்தி பிரபு என்பரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் சாலிகிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் கணவர் சக்தி பிரபு, அமுதாவை விட்டு பிரிந்து ஆவடியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அமுதா கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா விரக்தியின் உச்சத்தில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினியை எடுத்து குடித்தார். பின்னர் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டதாக தனது தோழியும், டி.வி. நடிகையுமான கிரணுக்கு செல்போனில் தகவல் சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து கிரண், உடனடியாக சாலிகிராமம் விரைந்து சென்று அமுதாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமுதா தான் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் திண்டலில் இருப்பதாகவும், நான் தற்கொலை முயற்சி செய்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
'அமுதா தற்கொலைக்கு முயன்றுள்ளார், அவரது நண்பர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்து குணமாக்கி உள்ளனர். தற்போது போலீஸ் விசாரணைக்கு பயந்து சொந்த ஊர் சென்று விட்டார். என்றாலும் அவர் மீது தற்கொலை முயற்சி பதிவு செய்யப்படும்' என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.