இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
விஜய் ஆண்டனி நடித்துள்ள “கோடியில் ஒருவன்” மற்றும் “ “காக்கி” படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதை இனிபினிட்டி பிலிம்ஸ் வெஞ்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்போது மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இந்நிறுவனம் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.
விஜய் ஆண்டனி கூறியதாவது : இயக்குநர் அமுதன் என்னிடம் இக்கதையை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடில்கும், ஸ்பூப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இக்கதையை அவர் கூறும்போது அவர் முழுதுமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார். அவர் கதையுடன் அந்தளவு ஒன்றியிருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார் என்றார்.
அமுதன் கூறியதாவது : விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான இனிபினிட்டி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி. நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிகிறேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.