பிளாஷ்பேக்: 200 படங்களை ராகத்தில் மிதக்க வைத்த எஸ்.வி.வி | 'ஜனநாயகன்' இயக்குனர் விண்வெளியிலா இருக்கிறார்?: சனம் ஷெட்டி கோபம் | மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் மரணம் | வன்முறைப் படங்களை விரும்புகிறதா இன்றைய தலைமுறை | 4 காமெடி நடிகர்கள் மே 16ல் மோதல் | பழைய தமிழ் பாடல்கள் மீது எனக்கு தனி காதல் : வேதிகா | கமலுக்கு தேசிய விருது கிடைக்குமா? | யோகிபாபு மீது அதிரடி குற்றச்சாட்டு | துல்கர் சல்மான் படத்தில் மிஷ்கின் | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் |
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகர்களையே மிரள வைத்த ராமராஜன் ஒருகட்டத்தில் அரசியல் பக்கம் சென்றதால் சினிமாவில் அவரது மார்க்கெட் டல் அடித்தது. கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான மேடை படத்தில் நடித்திருந்த அவர் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ராமராஜன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் ராமராஜன் கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி இதுவேயாகும். இந்நிகழ்ச்சியில் ராமராஜனை போல் அமுதவாணன் பெர்பார்மன்ஸ் செய்ய, அதை பார்த்து மகிழ்ந்த ராமராஜன் அமுதவாணனுக்கு தனது கையிலிருக்கும் ஆர் என்ற இனிஷியல் பதித்த தங்க மோதிரத்தை கழற்றி பரிசாக போட்டுவிட்டுள்ளார்.