'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் நடிப்பிற்கான இலக்கணம். அவரின் மகன்கள் பிரபு, ராம்குமாரை அடுத்து தேவ், விக்ரம் பிரபு இருவரும் சினிமாவில் கதாநாயகனாக நடித்தனர்.
இதில் விக்ரம் பிரபு வெற்றி தோல்வியை கடந்து நல்ல கதையை கேட்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் தற்போது முதல்முறையாக கதாநாயகனாக புதிய படத்தில் நடித்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை புதுமுக இயக்குனர் பாலா என்பவர் இயக்கியுள்ளார். இதில் ரோஜா, கங்கை அமரன், ஸ்ரிதா ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.




