2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சுந்தரி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். சினிமாவில் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேமராமேன் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து குழந்தையின் கையை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதோடு, அவர் வெளியிட்டுள்ள பதிவில், உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே, இவ்வுலகம் உனக்கானது மகளே. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி. அவர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை. எனக்கு அன்பு கொட்டி கொடுக்கும் மக்களின் பிரார்த்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிரார்த்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு கேப்ரில்லா...'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.